இன்றைய செய்திகள்

Showing posts with label தகவல்கள். Show all posts

உலகில் மிக விலை உயர்ந்த பேர்கர்

லண்டனை சேர்ந்த உணவு விடுதியொன்றில் 1100 ஸ்ரேலிங் பவுண் (சுமார் 228,000 ரூபா) விலையுள்ள பேர்கர் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக விலை உயர்ந்த பேர்­கர் இதுவெனக் கருதப்படுகிறது.

கிறிஸ் லார்ஜ் எனும் சமையல் நிபுணர் இந்த பேர்கரை தயாரித்துள்ளார். இறைச்சி, இறால் உட்பட பல்வேறு பொருட்களால் இந்த பேர்கர் தயாரிக்­க­ப்பட்டுள்ளது. இது 2618 கலோரியைக் கொண்டதாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகில் ,மிக விலை ,உயர்ந்த ,பேர்கர்


Read More »

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்... ஒரு ஷாக் ரிப்போர்ட்!

மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்றுவிடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 அண்டுகளாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இருதய துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 40 சதவீதம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.


அப்போது, இருதய துடிப்பு அடங்கிய பிறகு 3 நிமிடங்கள் தங்களது நினைவலைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் இருந்ததாகவும் அதுவே நாங்கள் மீண்டும் உயிர் பிழைக்க காரணமாக இருந்ததாகவும் கூறினர். நியூயார்க் பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், சவுதாம்ப்டன் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சியாளருமான டாக்டர் சாம்பர்னியா தனது ஆய்வு அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டவர்கள் தங்களுக்கு மாய தோற்றம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர் என்றார். -

Read More »

2,300 அடி உயரமான மலையில் ஏறி திருமணம் செய்து கொண்ட தம்பதி

கன­டாவைச் சேர்ந்த ஜோடியொன்று 2,300 அடி உய­ர­மான மலை உச்­சியில் ஏறி திரு­ம­ணம்­செய்­து­கொண்­டுள்­ளது. 29 வய­தான ஜெமி மற்றும் 33 வய­தான டேவிட் ஆகிய இரு­வரும் வித்­தி­யா­ச­மான முறையில் திரு­மணம் செய்­து­கொள்ள விரும்­பினர்.

இதனால், கன­டாவின் பிரிட்டிஷ் கொலம்­பியா பிராந்­தி­யத்­தி­லுள்ள 2,300 அடி உய­ர­மான மலையில் ஏறி அவர்கள் திரு­மணம் செய்­து­கொண்­டனர். இதற்­காக செங்­குத்­தான பாறை­க­ளையும் அவர்கள் கடந்து செல்ல வேண்­டி­யி­ருந்­தது. இந்த சாக­சத்­துக்கு ஈடு­கொ­டுக்­கக்­ கூ­டிய வகையில் இந்த ஜோடியின் திரு­மண ஆடைகள் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தன.


இத்­திரு­ம­ணத்­துக்­காக சுமார் 15 இலட்சம் ரூபாவை இத்­தம்­ப­தி­யினர் செல­விட்­டுள்­ளனர். திரு­ம­ணத்­தின்­போது பிடிக்­கப்­பட்ட படங்­க­ளையும் வீடி­யோ­வையும் பார்த்த பலர், இக்காட்சிகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுததாக தெரிவித் தனர் என ஜெமி கூறுகிறார். - 

Read More »

உலகின் மிக வலிமையான பாதிரியார்

கனடாவைச் சேர்ந்த பாதியாரான கெவின் பாஸ்ட் உலகின் மிக வலிமையான உடல் கொண்ட பாதிரியார் என புகழ்பெற்றுள்ளார். 51 வயது பாதிரியாரான கலாநிதி கெவின் பாஸ்ட் தனது உடற்பலத்தின் மூலம் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளதுடன் பல கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார். 189 தொன் எடையுள்ள விமானமொன்றை தனது உடலில் கட்டி இழுத்தமையும் அவர் படைத்த கின்னஸ் சாதனைகளில் ஒன்றாகும்.

உலகில் மனிதர் ஒருவரால் இழுத்துச்செல்லப்பட்ட மிக அதிக எடையுள்ள விமாம் இதுவாகும். 100 அடி தூரத்திற்கு மிகப் பாரமான வாகனமொன்றை (63.2 தொன்) இழுத்துச்சென்றமை, 500 கிலோ எடையை தனது தோளில் தூக்கி வைத்திருந்தமை, மிக அதிக எண்ணிக்கையானோரை (11 பேர்) தனது தோளில் சுமந்தமை போன்ற சாதனைகளையும் அவர் படைத்தள்ளார். கனடாவின் கோபோர்க் பிராந்தியத்திலுள்ள தேவாலயமொன்றில் பாதிரியார் கெவின் பாஸ்ட் பணியாற்றுகிறார்.

ஓய்வு நேரத்தில் இத்தகைய சாகசங்களில் ஈடுபடுவதுடன், வட அமெரிக்காவில் சாகச விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துகிறார். திருமணம் செய்து 3 பிள்ளைகளுக்குத தந்தையான கலாநிதி கெவின் பாஸ்;ட், தனக்கு கிடைக்கும் பணப்பரிசுகள் அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்குகிறராம். 188.8 தொன் எடையுள்ள சி.சி177 குளோப்மாஸ்டர் ரக விமானத்தை இழுத்தது சாதனை படைத்தபோது தான் சேகரித்த 65,000 டொலர்களையும் இவர் அறக்கட்டளையொன்றுக்கு வழங்கினார்.

 'இத்தகைய சாகசங்களை நான் எனது உடற்பலத்தில் செய்வது பலருக்கு நம்புவதற்கு கடினமாகவுள்ளது. ஆனால், எனது தேவாலயத்திற்கு வரும் மக்கள் எனக்கு எப்போதும் ஆதரவளிக்கின்றனர். 'இறைவன் அளித்த கொடையினால் என்னால் இந்த சாகசங்களை செய்ய முடிகிறது என எண்ணுகிறேன். மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே இறைவன் அருளால் எனக்கு பரிசுகள் கிடைக்கின்றன எனவும் எண்ணுகிறேன். அதனால், பரிசுககளை அறக்கட்டளைகளுக்கு வழங்குகிறேன்' என அவர் கூறுகிறார்.

Read More »

1,600 இறாத்தல் எடைகொண்ட இராட்சத பூசணிக்காய்

பிரிட்­டனை சேர்ந்த இரட்டைச் சகோ­த­ரர்கள் 1,600 இறாத்தல் நிறை கொண்ட பூசணிக்­காயை உற்­பத்தி செய்­துள்­ளனர். 53 வய­தான இயன் பெட்டன் மற்றும் ஸ்டூவர்ட் பெட்டன் ஆகிய இவ்­விரு இரட்டை சகோ­த­ரர்கள் கூட்டு முயற்­சியின் பய­னாக இந்த இராட்­சத பூசணிக்­காயை அறு­வடை செய்து வெற்றி கண்­டுள்­ளனர்.

அனு­ப­வ­மிக்க விவ­சா­யி­க­ளான இவ்­விரு சகோ­த­ரர்­களும் மிகக் கவ­ன­மாக இந்த பூசணிக்­காயை வளர்த்­த­தாக தெரி­வித்­துள்­ளனர். இந்த பூசணிக்காய் 1,600 இறாத்தல் (சுமார் 725 கிலோ கிராம் ) எடை­கொண்­டுள்­ளது. இது பிரிட்­டனில் இது­வரை பதி­வு­செய்­யப்­பட்ட மிக அதிக எடை­யு­டைய பூசணிக்காய் ஆகும்.

இதற்­குமுன் 1,520 இறாத்தல் எடை­யுள்ள பூசணிக்­கா­யொன்றே பிரிட்­டனின் மிகப்­பெ­ரிய பூசணிக்­கா­யாக இருந்­தது. பெட்டன் சகோ­த­ரர்கள் அறு­வடை செய்த பூசணிக்­காயின் சுற்­ற­ளவு 16 அடி (4.5 மீற்றர்) ஆக உள்­ளது. 2,032 இறாத்தல் எடை­யுள்ள பூசணிக்காய் ஒன்றே உலகின் மிகப்­பெ­ரிய பூசணிக்­கா­யாக பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இச்­சா­த­னை­யையும் என்­றா­வது ஒருநாள் தாம் முறியடிக்க வேண்டும் என இயன், ஸ்டூவர்ட் சகோதரர்கள் விரும்புகின்றனர்.

Read More »

துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?

சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.
அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது.

மேல படிங்க.

பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம்.

யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்..

Read More »

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றி உச்சியில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப் போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது. பெண்கள் தெருவில் செல்லும் போது தலை குனிந்து செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, அவளது உச்சிநெற்றி நன்கு தெரியும்.
அதில், வகிடுப்பொட்டு இருந்தால் திருமணமானவள் என்பதை புரிந்துகொண்டு விலகிச்செல்வர். அதேசமயம் திருமணமான ஆண்கள் கால்விரலில் மெட்டி அணிந்து செல்லும் போது, பெண்கள் அவர்களது மெட்டியை கண்டு, அவனை எதிர் நோக்காமல் விலகிச் செல்வர். இவ்வாறு ஆணோ, பெண்ணோ திருமணம் ஆனவர்களா என்பதை உணர்த்துவதற்கான அடையாளமாகவே இவை அமைந்தன.
திருமணமான, பெண்கள், மெட்டி, அணிவது, ஏன்?

பிற காரணம்…: பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. முக்கியமாக கருப்பை நோய்களை கட்டு படுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி என்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் எமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பி

Read More »

உலகின் அதி பயங்கரமான விஷத் தோட்டம் (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் “உயிரை கொல்லக் கூடியது” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் உலகின் அதி பயங்கரமான விஷத் தோட்டம் அமைந்துள்ளது. வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள ஆலன்விக்(Alnwick) என்ற தோட்டத்தில் பல ஏக்கர் நிலத்தில் கண்ணைகவரும் வண்ண வண்ண நிறங்களில் மனம் வீசும் ரோஜா மலர்கள் மற்றும் நீரூற்றுகள் என பல வகையான அம்சம்சங்கள் உள்ளன.

இந்த தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிட்டத்தட்ட 100 வகையான விஷ செடிகளுக்கென்று தனியாக ஒரு தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் தோட்டமான இதன் வாசல் கதவுகளில், எலும்பு கூடுகள் வரையப்பட்டு ”இந்த செடிகள் உயிரை கொல்லக் கூடியது” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரிய நிறத்திலான பெரிய இரும்பு கதவுகளுக்கு பின்னால் அமைந்துள்ள அந்த தோட்டத்தினுள் செல்லும் பார்வையாளர்கள், ஒரு இடத்தில் நிற்ககூடாது என்றும், செடிகளையும் மலர்களையும் தொடக்கூடாது, நுகரக்கூடாது என்று வெளிப்படையாக அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனெனில் அந்த விஷ செடிகளை சில நிமிடங்கள் தொடர்ந்து முகர்ந்தால் கூட பலவிதமான பக்கவிளைவுகள் முதல் மரணம் கூட ஏற்படும் அபாயமுள்ளது. இங்கு உள்ள சில செடிகளின் பாகங்களை உட்கொள்வதாலோ அல்லது நுகர்வதாலோ அதீத தூக்கம், வாந்தி, கோமா போன்ற பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இங்குள்ள செடிகளில் ஒன்றான மான்க்ஸ்ஹுட்(monkshood) என்பதன் வேர்களை மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் சிறிது போட்டால் போதும், அது மொத்த கிராமத்தையும் கூண்டோடு கொள்ளும் அளவுக்கு வீரியம் வாய்ந்தது. 

Read More »

மூக்கு மற்றும் காது குத்துவது எதற்கு.? அறிவியல் விளக்கம்..!!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.

நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.


இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன். 

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.

தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

Read More »

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள்.

அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர்.

இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.


மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள்.

அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது.

அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம்.

அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

நன்றி.

Read More »

உலகின் உயர்ந்த சிறுவன் !! - உலகசாதனை

உ.பி.யில்  வயது 5 – உயரம் 5.7 அடி: கின்னஸ் சாதனை படைத்தார் மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சஞ்சய் சிங் – சுவேத்லனா என்ற தம்பதியின் மகன் கரண் சிங். அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வரும் கரண்சிங், 5 வயதிலேயே 5.7 அடி உயரத்தை எட்டியுள்ளார். இது குறித்து அவருடைய தந்தை சஞ்சய் கூறுகையில், என் மகன் கரண் சிங்கை பள்ளியில் சேர்த்தோம். அவனை கண்டு மற்ற குழந்தைகளெல்லாம் அலறியடித்து ஓடினார்கள்.

பின்னாளில், கரணுடன் நன்றாக பழகினார்கள். இப்போது அவனுக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். என்றார். உயரத்தில், கரணுடைய அம்மா சுவேத்லனாவும் சளைத்தவர் அல்ல. 7.2 அடி உயரம் உள்ள அவர், கடந்த 2012 வரை, இந்தியாவின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை, தன் வசம் வைத்திருந்தார். அதன் பின்னர், இந்த சாதனையை மேற்கு வங்கத்தை சேர்ந்த, 8.2 அடி உயரம் கொண்ட சித்திகா பர்வீன், என்பவர் வசப்படுத்திக் கொண்டார்.
உலகின், உயர்ந்த ,சிறுவன் , உலகசாதனை
2007ல் திருமணத்தின்போது, 6.6 அடி உயரமாக சுவேத்லனா இருந்தார். 25 வயதிலும் அவர் வளர்ந்து வருவதற்கு, அதிகமான வளர்ச்சி ஹார்மோன்களே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். உயரம் மட்டுமின்றி, அம்மா சுவேத்லனாவுக்கும், மகன் கரண் சிங்குக்கும் கேட்கும் திறன் அசாதாரணமாக உள்ளது.

Read More »