3 மார்பங்களைக் கொண்டுள்ளதாக பெண் கூறுவது பொய்?

தனக்கு மூன்று மார்பகங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்க யுவதியொருவர் வெளியிட்ட புகைப்படங்க்ள போலியானவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஜெஸ்மின் ட்ரைடெவில் என தன்னை அறிமுகப்படுத்த்திக்கொண்ட யுவதியே பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மூலம் மூன்றாவது மார்பகமொன்றை தான் உருவாக்கிக்கொண்டதாக கூறுகிறார். தன் மீதான ஆண்களின் ஈர்ப்பை குறைப்பதற்காக இவ்வாறு செய்துகொண்டதாகவும் இதற்காக 20,000 அமெரிக்க டொலர்களை தான் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்ர்.

தான் மூன்று மார்பகங்களுடன் காணப்படுவதைப் போன்ற புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டார். ஆனால், அத்தகைய சத்திரசிகிச்சை எதையும் மேற்படி செய்துகொண்டிருக்க மாட்டார் எனவும் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை எனவும் கூறப்படுகிறது. ஜெஸ்மின் ட்ரைடெவில் தனது உண்மையான பெயரை வெளியிடவில்லை. ஆனால், அலிஷா ஹெஸ்லர் எனும் யுவதியே ஜெஸ்மின் ட்ரைடெவில் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களில் தோன்றுகிறார் என அமெரிக்க இணைத்தளமொன்று தெரிவித்துள்ளது.


இவர் ஏற்கெனவே இணையத்தில் போலியான தகவல்களை பரப்பி வேடிக்கை காட்டியவர் எனக் கூறப்படுகிறது. அதேவேளை, சில வாரங்களுக்குமுன் புளோரிடாவிலுள்ள டெம்பா சர்வதேச விமான நிலையத்தில் தனது பயணப்பொதியொன்று திருடப்பட்டுள்ளாக அலிஷா முறைப்பாடு செய்தார் எனவும் அவர் அளித்த காணாமல் போன பொருட்களின் பட்டியலில் 3 செயற்கை மார்பகங்களும் குறிப்பிடப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. -