6 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

சீனா­வி­லுள்ள கன்­றுக்­குட்­டி­யொன்று 6 கால்­க­ளுடன் காணப்­ப­டு­கி­றது. ஷாங்டோங் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஸாங் கோங்ஸுன் எனும் விவ­சாயி வளர்த்த மாடு­களில் ஒன்றே இக்­கன்­றுக்­குட்­டியை ஈன்­றுள்­ளது. இக்­கன்றின் மேல­திக கால்­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அகற்ற முடியும் என நிபு­ணர்கள் தெரி­வித்­தனர். ஆனால், அதற்கு மேற்­படி விவ­சாயி மறுத்­து­விட்டார்.
6 ,கால்களுடன், பிறந்த ,கன்றுக்குட்டி

அதனால் 6 கால்­க­ளுடன் அக்­கன்று காணப்­ப­டு­கி­றது. "இக்­கன்றின் தாய்ப்­ப­சுவை நான் 5 வரு­டங்­க­ளாக வளர் த்து வரு­கிறேன். இதற்­குமுன் அது நான்கு கன்­று­களை ஈன்­றுள்­ளது. ஆனால், இவ்­வா­றான ஒரு கன்­றுக்­குட்­டியை நான் பார்த்­த­தில்லை. இக்­கன்றை பார்­வை­யி­டவும் அத­னு டன் படம்­பி­டித்­துக்­கொள்­ளவும் பலர் வருகின்றனர்" என ஸாங் கோங்ஸுன் கூறுகிறார். -