பெண்ணுக்கு மூன்றாவது மார்பு - pics

உலகிலுள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் அன்றாட உணவுக்காக கூட வழி தேடிக்கொண்டிருக்கும் நிலையில் பணத்தை வீணடிப்பதற்காகவே சிலர் வழி தேடிக்கொண்டிருக்கின்றனர். தற்போதுள்ள நடைமுறை பழக்கங்களை பார்த்தால் உலக அழிவு சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கின்றது.


பெண்ணொருவர் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றில் நிகழச்சியொன்றுக்காக 20,000 அமெரிக்க டொலர் (இலங்கை பணம் ரூ.2,606,500) செலவு செய்து புதியதொரு மார்பை பொருத்தியுள்ளார் என்று கூறினால் நம்பவீர்களா?அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்மீன் எனும் பெண்ணே இவ்வாறு வித்தியாசமானதொரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வளவோ சாதனையை செய்த வைத்தியத்துறையே இவ்வாறான சத்திரசிகிச்சையை செய்யமுடியாது என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 50 முதல் 60 வரையிலான வைத்தியர்களிடம் குறித்த பெண் சிகிச்சைக்காக சென்றுள்ளார். 

இருந்தபோதிலும் வைத்தியர்களுக்கேயான நெறிமுறைகளை மீறக்கூடாது என்ற காரணத்தினால் இதனை செய்யமுடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அமெரிக்காவிலுள்ள சிறந்த வைத்தியொருவரினால் 2 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் குறித்த பெண்ணுக்கு 3ஆவது மார்பு பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதன் காரணமாக ஜெஸ்மீனின் பெற்றோர் இவருடன் பேசுவதில்லையாம். 

நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காகவே இவ்வாறு செய்துக்கொண்டேன். இதனை ஒரு அதிஷ்ட அங்கமாக நான் எண்ணுகிறேன். நான் பிரபல்யத்தை விரும்புகின்றேன்.

எனக்கு ஆண்களுடன் நேரத்தை வீணடிப்பது பிடிக்காது. இவ்வாறான எனது தோற்றம் கவர்ச்சியற்றதாகவே ஆண்களுக்கு தெரியும். அதனை நான் விரும்புகிறேன் என்று ஜெஸ்மீன் தெரிவித்துள்ளார்.