1,600 இறாத்தல் எடைகொண்ட இராட்சத பூசணிக்காய்

பிரிட்­டனை சேர்ந்த இரட்டைச் சகோ­த­ரர்கள் 1,600 இறாத்தல் நிறை கொண்ட பூசணிக்­காயை உற்­பத்தி செய்­துள்­ளனர். 53 வய­தான இயன் பெட்டன் மற்றும் ஸ்டூவர்ட் பெட்டன் ஆகிய இவ்­விரு இரட்டை சகோ­த­ரர்கள் கூட்டு முயற்­சியின் பய­னாக இந்த இராட்­சத பூசணிக்­காயை அறு­வடை செய்து வெற்றி கண்­டுள்­ளனர்.

அனு­ப­வ­மிக்க விவ­சா­யி­க­ளான இவ்­விரு சகோ­த­ரர்­களும் மிகக் கவ­ன­மாக இந்த பூசணிக்­காயை வளர்த்­த­தாக தெரி­வித்­துள்­ளனர். இந்த பூசணிக்காய் 1,600 இறாத்தல் (சுமார் 725 கிலோ கிராம் ) எடை­கொண்­டுள்­ளது. இது பிரிட்­டனில் இது­வரை பதி­வு­செய்­யப்­பட்ட மிக அதிக எடை­யு­டைய பூசணிக்காய் ஆகும்.

இதற்­குமுன் 1,520 இறாத்தல் எடை­யுள்ள பூசணிக்­கா­யொன்றே பிரிட்­டனின் மிகப்­பெ­ரிய பூசணிக்­கா­யாக இருந்­தது. பெட்டன் சகோ­த­ரர்கள் அறு­வடை செய்த பூசணிக்­காயின் சுற்­ற­ளவு 16 அடி (4.5 மீற்றர்) ஆக உள்­ளது. 2,032 இறாத்தல் எடை­யுள்ள பூசணிக்காய் ஒன்றே உலகின் மிகப்­பெ­ரிய பூசணிக்­கா­யாக பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இச்­சா­த­னை­யையும் என்­றா­வது ஒருநாள் தாம் முறியடிக்க வேண்டும் என இயன், ஸ்டூவர்ட் சகோதரர்கள் விரும்புகின்றனர்.