உலகின் மிக வலிமையான பாதிரியார்

கனடாவைச் சேர்ந்த பாதியாரான கெவின் பாஸ்ட் உலகின் மிக வலிமையான உடல் கொண்ட பாதிரியார் என புகழ்பெற்றுள்ளார். 51 வயது பாதிரியாரான கலாநிதி கெவின் பாஸ்ட் தனது உடற்பலத்தின் மூலம் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளதுடன் பல கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார். 189 தொன் எடையுள்ள விமானமொன்றை தனது உடலில் கட்டி இழுத்தமையும் அவர் படைத்த கின்னஸ் சாதனைகளில் ஒன்றாகும்.

உலகில் மனிதர் ஒருவரால் இழுத்துச்செல்லப்பட்ட மிக அதிக எடையுள்ள விமாம் இதுவாகும். 100 அடி தூரத்திற்கு மிகப் பாரமான வாகனமொன்றை (63.2 தொன்) இழுத்துச்சென்றமை, 500 கிலோ எடையை தனது தோளில் தூக்கி வைத்திருந்தமை, மிக அதிக எண்ணிக்கையானோரை (11 பேர்) தனது தோளில் சுமந்தமை போன்ற சாதனைகளையும் அவர் படைத்தள்ளார். கனடாவின் கோபோர்க் பிராந்தியத்திலுள்ள தேவாலயமொன்றில் பாதிரியார் கெவின் பாஸ்ட் பணியாற்றுகிறார்.

ஓய்வு நேரத்தில் இத்தகைய சாகசங்களில் ஈடுபடுவதுடன், வட அமெரிக்காவில் சாகச விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துகிறார். திருமணம் செய்து 3 பிள்ளைகளுக்குத தந்தையான கலாநிதி கெவின் பாஸ்;ட், தனக்கு கிடைக்கும் பணப்பரிசுகள் அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்குகிறராம். 188.8 தொன் எடையுள்ள சி.சி177 குளோப்மாஸ்டர் ரக விமானத்தை இழுத்தது சாதனை படைத்தபோது தான் சேகரித்த 65,000 டொலர்களையும் இவர் அறக்கட்டளையொன்றுக்கு வழங்கினார்.

 'இத்தகைய சாகசங்களை நான் எனது உடற்பலத்தில் செய்வது பலருக்கு நம்புவதற்கு கடினமாகவுள்ளது. ஆனால், எனது தேவாலயத்திற்கு வரும் மக்கள் எனக்கு எப்போதும் ஆதரவளிக்கின்றனர். 'இறைவன் அளித்த கொடையினால் என்னால் இந்த சாகசங்களை செய்ய முடிகிறது என எண்ணுகிறேன். மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே இறைவன் அருளால் எனக்கு பரிசுகள் கிடைக்கின்றன எனவும் எண்ணுகிறேன். அதனால், பரிசுககளை அறக்கட்டளைகளுக்கு வழங்குகிறேன்' என அவர் கூறுகிறார்.