100ஆவது பிறந்த தினத்தில் 11,000 அடி உய­ரத்தில் பாட்டி பல்டி

பிரிட்டனை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக கிளைடர் ரக விமானத்தில் 11,000 அடி உயரம் பறந்துள்ளார். நோரா எனும் இம்மூதாட்டி அண்மைக்காலமாக தனது பிறந்த தினங்களை வித்தியாசமான சாகசங்களுடன் கொண்டாடி வருகிறார்.

இதன்படி, 100 ஆவது பிறந்த தினத்தன்று கிளைடர் விமானத்தில் விமானியொருவருடன் 11,000 அடி உயரம் பறந்தார்.

11,000 அடி உயரத்தில் வைத்து அவ்விமானத்தை விமானி. தலைகீழாக திருப்பி கரணமடிக்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது. தாதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நோரா, தனது 80ஆவது பிறந்த தினத்தில் மிக வெப்பவாயு பலூனில் பறந்தார்.

95 ஆவது பிறந்த தினத்தன்று மூன்று சக்கரங்கள் கொண்ட மோட்டார் சைக்கிளொன்றை செலுத்தி தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.  இந்த மூதாட்டிக்கு இரு­மகள் மார்­க­ளான 58 வயதான கே டிராபர், 52 வயதான சோனியா, மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.