பிறந்தவுடன் நீச்சல் அடித்த அதிசய குழந்தை

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே நீச்சல் குளத்தில் இறக்கி விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த சார்லஸ் (Charles)என்ற குழந்தை நீச்சல் குளத்தில் குளித்த மிக சிறிய குழந்தை என்ற பெயர் பெற்றுள்ளது.


இக்குழந்தை பிறந்து வெறும் 31 மணி நேரம் 46 நிமிடங்கள் தான் ஆகியுள்ளது. அதற்குள் தனது தந்தை சிமன் (Siman age - 31) கையில் அமர்ந்து கொண்டு நீச்சல் குளத்தில் இறங்கியுள்ளது.

பச்சிளம் குழந்தையான சார்லஸ் பிஞ்சி கைகளுடன், கண்களை மூடிக்கொண்டு தனது தந்தையுடன் தண்ணீரில் உள்ள காட்சி அனைவரையும் கண்களையும் கவர்ந்துள்ளது. மேலும் இவரின் தந்தை குழந்தைகளின் நீச்சல் பள்ளிக்கூடத்தில் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிமன் கூறுகையில், சார்லஸ் 30 மாதங்களில் நன்றாக நீந்தவும், மூச்சை அடக்கவும் கற்றுக் கொள்வார் என கூறியுள்ளார்.