மரத்தில் தோன்றிய ஜீசஸ் உருவம்! (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் நபர் ஒருவர் வெட்டிய மரத்தில் கிறிஸ்துவ கடவுள் ஏசு நாதரின் உருவமிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டென்னிசி (Tennesee) மாநிலத்தில் வசிக்கும் டேனியல் டர்பிவில்லி (Daniel Turbeville) என்ற நபர் மரக்கடை வைத்திருக்கிறார்.

இவர் மரம் ஒன்றை அறுத்துக் கொண்டிருந்தபோது, அதன் தண்டு பகுதியில் இறைவன் ஏசு கிறிஸ்துவின் உருவத்தை பார்த்ததால் திடீரென திகைப்பில் ஆழ்ந்துள்ளார்.


ந்நிலையில் கிறிஸ்துவின் உருவம் தனக்குத்தான் இப்படித் தெரிகிறதா? இல்லை மற்றவர்களுக்கும் தெரிகிறதா? என்பதனை கண்டுபிடிக்க பார்வையாளர்களை அழைத்து வந்து அந்த மரத்தை காட்டியுள்ளார். இச்செய்தி அப்பகுதியில் காட்டுத் தீயாய் பரவவே, அங்குள்ள 70 சதவீதம் பேர் மரத்தில் ஏசு கிறிஸ்து தெரிவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஏசு நாதரின் உருவம் கொண்ட இந்த மரத்தை பல்வேறு நபர்கள் விலைக்குக் கேட்டும் அதனை கொடுக்காமல் தேவலாயம் ஒன்றிற்கு வழங்கியுள்ளார்.