முற்றிலும் தலைமயிர்களால் அலங்கரிக்கப்பட்ட கார்

இத்­தா­லியை சேர்ந்த பெண்­ணொ­ருவர் காரொன்றை தலை­ம­யிர்­களால் அலங்­க­ரித்து கின்னஸ் சாதனை படைத்­துள்ளார். 44 வய­தான மரியா லூசியா முங்னோ, எனும், பியட் ரக காரொன்றின் உட்­பு­றத்­தையும் வெளிப்­பு­றத்­தையும் முற்­றிலும் தலை­ம­யிர்­களால் மறைத்து அலங்­க­ரித்­துள்ளார்.
தனது உத­வி­யாளர் வெலன்­டினோ ஸ்டஸ்­சா­னோ­வுடன் இணைந்து இக்­கா­ருக்கு பல்­வேறு வகை­யான பின்னல் அலங்­கா­ரங்­களை மரியா செய்­துள்ளார். இந்­தி­யா­வி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட தலை­ம­யிர்­களை இதற்கு பயன்­ப­டுத்­தி­யதாக மரியா கூறு­கிறார். தலை­ம­யிர்­களால் முற்­றாக மறைக்­கப்­பட்ட கார் என கின்னஸ் சாதனை நூலில் இக்கார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.