மனித முகத்தில் குட்டி போட்ட ஆடு - அதிர்ச்சியில் விவசாய குடும்பம்.!

ஆர்ஜென்டீனாவிலுள்ள கிராமமொன்றில் ஆடு ஒன்று மனித முகம் கொண்ட ஆட்டுக்குட்டியொன்றை ஈன்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டுக்குட்டியின் முகத்தோற்றமானது மனித வடிவில் அமைந்துள்ளதால் மனிதனின் உடல் உறவால் பிறந்த ஆட்டுக் குட்டி என பலர் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர்களான விவசாய குடும்பமொன்றின் அங்கத்தவர்கள் மீது சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும் மேற்படி குடும்பத்தினர் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். "இது மனித இனத்துக்கே இழிவாக அமைய கூடியவகையிலான அத்தகைய நடத்தையில் நாங்கள் ஈடுபடவில்லை நாங்கள் விவசாயத்திற்காக பாவிக்கும் பீடைநாசிகளின் தாக்கத்தின் விளைவாக இவ்வாறான உருமாற்றத்திற்கு காரணமாகியுள்ளது" என அக்குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த ஆட்டு குட்டியானது பிறந்து சில மணிநேரங்களின் பின் இறந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படங்களை அக்குடும்பத்தினரின் நண்பர் ஒருவர் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அளவுக்கு அதிகமான பீடை நாசினிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கை வெளிப்படுத்துவதே அவரின் நோக்கமாக இருந்தது.

ஆனால், அவர் எதிர்பாராதவாறு அக்குடும்பத்தினரின் மீது சந்தேகப் பார்வைகள் ஏற்படுவதற்கு இந்த புகைப்படங்கள் காரணமாகி விட்டன.