இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்... ஒரு ஷாக் ரிப்போர்ட்!

மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்றுவிடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 அண்டுகளாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இருதய துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 40 சதவீதம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.


அப்போது, இருதய துடிப்பு அடங்கிய பிறகு 3 நிமிடங்கள் தங்களது நினைவலைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் இருந்ததாகவும் அதுவே நாங்கள் மீண்டும் உயிர் பிழைக்க காரணமாக இருந்ததாகவும் கூறினர். நியூயார்க் பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், சவுதாம்ப்டன் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சியாளருமான டாக்டர் சாம்பர்னியா தனது ஆய்வு அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டவர்கள் தங்களுக்கு மாய தோற்றம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர் என்றார். -