2,300 அடி உயரமான மலையில் ஏறி திருமணம் செய்து கொண்ட தம்பதி

கன­டாவைச் சேர்ந்த ஜோடியொன்று 2,300 அடி உய­ர­மான மலை உச்­சியில் ஏறி திரு­ம­ணம்­செய்­து­கொண்­டுள்­ளது. 29 வய­தான ஜெமி மற்றும் 33 வய­தான டேவிட் ஆகிய இரு­வரும் வித்­தி­யா­ச­மான முறையில் திரு­மணம் செய்­து­கொள்ள விரும்­பினர்.

இதனால், கன­டாவின் பிரிட்டிஷ் கொலம்­பியா பிராந்­தி­யத்­தி­லுள்ள 2,300 அடி உய­ர­மான மலையில் ஏறி அவர்கள் திரு­மணம் செய்­து­கொண்­டனர். இதற்­காக செங்­குத்­தான பாறை­க­ளையும் அவர்கள் கடந்து செல்ல வேண்­டி­யி­ருந்­தது. இந்த சாக­சத்­துக்கு ஈடு­கொ­டுக்­கக்­ கூ­டிய வகையில் இந்த ஜோடியின் திரு­மண ஆடைகள் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தன.


இத்­திரு­ம­ணத்­துக்­காக சுமார் 15 இலட்சம் ரூபாவை இத்­தம்­ப­தி­யினர் செல­விட்­டுள்­ளனர். திரு­ம­ணத்­தின்­போது பிடிக்­கப்­பட்ட படங்­க­ளையும் வீடி­யோ­வையும் பார்த்த பலர், இக்காட்சிகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுததாக தெரிவித் தனர் என ஜெமி கூறுகிறார். -