தற்கொலை முடிவால் உடல் பருமன் குறைந்த அதிசயம்....!!

பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் உடல் எடை அதிகமாக உள்ளதால் கடும் பாதிப்புக்குள்ளாகி மனமுடைந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் வியக்கத்தக்க வகையில் அவர் சாவதற்காக அருந்திய விஷம் அவருடைய உடல் எடையை குறைத்துள்ளது.
பிரிட்டனின் கிழக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த 22 வயதான, மைக் வாட்பி என்ற வயது இளைஞர் தன் தன் 21வது வயதில், 133 கிலோ எடை உடையவராய் இருந்துள்ளார். தொடர்ந்து அவரது உடல் பருமண் அதிகரிக்க 29வது வயதில் 209 கிலோவை எட்டினார். தன்னால் எவ்வளவு முயன்றும் தன் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை என்ற பட்சத்தில், அதிகபடியான விஷ மாத்திரைகளை உட் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தக்க சமயத்தில் அவரை மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்துள்ளார். இந்நிகழ்வின் பின், அவருடைய உடல் எடை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்துள்ளது. இதனை உணர்ந்த மைக் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அவர் தற்கொலைக்காக எடுத்துக்கொண்ட விஷம், அவருடைய உடல் எடையை குறைக்க உதவி செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் பெரும் மகிழ்ச்சி கொண்ட இவர், உடனே தன் உடலை விரைவாக மெலிய வைக்க மனம் தளராமல் தினமும் 3 மணிநேரம் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து வந்தார். இதன் விளைவாக 18 மாதங்கள் கழித்து தற்போது இவர் 114 கிலோ எடையுடன் ”மிஸ்டர் மஸ்ல்ஸ்” என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். தற்கொலை செய்து கொண்டபோது அப்பகுதியில் பிரபலமான இவர் உடல் எடையை குறைத்ததும் பெரும் பெயரை பெற்றுள்ளார்.