கார் நிறுத்தும் இடத்தின் விலை ரூ.6 கோடி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கார் நிறுத்தும் இடம் ரூ.6 கோடிக்கு விற்கப்பட்டு வருகிறது. உலக வர்த்தக மையம் இருந்த இடத்துக்கு வடகிழக்கில் சோ ஹோ என்ற பகுதி உள்ளது. மிகவும் ஆடம்பரமான அப்பகுதியில் கார்களை நிறுத்த போதிய இடங்கள் கிடையாது. எனவே, தரைக்கு அடியில் கார் நிறுத்தும் இடங் களை கட்டி விற்று வருகிறார்கள். இதுபோன்று 10 இடங்கள் கட்டப்பட்டுள்ளன. 
அவற்றில் ஒவ்வொரு கார் நிறுத்துவதற்கான இடமும் ரூ.6 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில், அமெரிக்காவில் உள்ள டல்லாஸ், சியாட்டில் போன்ற நகரங்களில் வீடே வாங்கி விடலாம். ஆனால் அந்த தொகைக்கு சோ ஹோ பகுதியில் கார் நிறுத்தும் இடம் விற்கப்பட்டு வருகிறது.