இந்தியாவில் வாலுடன் பிறந்த சிசு

இந்தியாவில் வால்போன்ற அமைப்புடன் சிசுவொன்று பிறந்துள்ளது.  பிறந்து ஐந்து நாட்களேயான இச்சிசுவின் இடுப்புப்பகுதியில் 12 சென்றிமீற்றர் நீளமான வால் போன்ற அங்கமொன்று காணப்பட்டுள்ளது. இதனை வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

பெயர் சூட்டப்படாத இச்சிசு கருவில் உருவாகும்போது இரட்டை கருவை கொண்டிருந்துள்ளது. 

இருந்த போதிலும் குறித்த சிசுவின் உடன்பிறப்பு உடலமைப்பு ரீதியாக முழுமையாக வளர்ச்சியடையாததால் அதனது ஒரு பகுதி இந்த சிசுவின் உடலில் வால் போன்ற அமைப்பில் ஒட்டிகொண்டுள்ளது.


இவ்வால் சுமார் நான்கு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட இவ்வாலின் நிறை 350கிராம் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளர்.

எனது நான்காவது குழந்தை இவ்வாறு பிறந்ததையிட்டு நான் மிகவும் கவலையடைகின்றேன்.

இந்தவால் போன்ற அங்கத்தை அகற்றாமல் விட்டுவிட்டால் இவரை அனைவரும் வித்தியாசமாக பார்ப்பார்கள். பாடசாலைகளில் எனது குழந்தை வேறு விதமாக நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை என்று சிசுவின் தாய் தெரிவித்துள்ளார்.